நீதிமன்றத்தை எதிர்த்து 5 மாத குழந்தையுடன் தலைமறைவாகிய கணவன்

Mayoorikka
3 years ago
நீதிமன்றத்தை எதிர்த்து  5 மாத குழந்தையுடன் தலைமறைவாகிய கணவன்

யாழ். இளவாலையில் 5 மாத குழந்தையுடன் கணவன் தலைமறைவாகியுள்ளதாக மனைவி இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கணவன் 5 மாதப் பிள்ளையை துாக்கி சென்ற சம்பவம் தொடர்பில் ஏற்கனவே முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனடிப்படையில் பொலிஸார் மல்லாகம் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதடையடுத்து கணவனை குழந்தையோடு நீதிமன்றில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டது.

எனினும் பிள்ளையின்றி நீதிமன்றில் முன்னிலையான நிலையில், 5 மாத பாலூட்டும் குழந்தை என்பதற்கிணங்க தாயாரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் பணித்தது.

இந்நிலையில் குழந்தையை தாயாரிடம் ஒப்படைக்காது கணவர் குழந்தையோடு இன்று தலைமறைவாகியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!