சுற்றுலா விடுதி ஒன்றின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி வீழ்ந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழப்பு!
Reha
3 years ago

பதுளை, எல்ல பிரதேசத்தில் சுற்றுலா விடுதி ஒன்றின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த செக் குடியரசைச் சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். தெமோதரை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
28 வயதான இந்நபர் நேற்று (19) இரவு குறித்த விடுதியில் உல்லாசமாக இருந்த போது கீழே விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் எல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



