கொரோனா கட்டுப்பாடுகளை ரத்து செய்யும் சுவிட்சர்லாந்து நாட்டு அரசு

சுவிட்சர்லாந்து நாட்டு அரசு கொரோனா பரவல் காரணமாக அறிவுறுத்தி இருந்த கட்டுப்பாடுகளை ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக சுவிட்சர்லாந்து நாட்டு அரசு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. மேலும் தடுப்பூசி கட்டாயமாக செலுத்த வேண்டும் என்று அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. இதனை அடுத்து பொது இடங்களுக்கு செல்லும் போது தடுப்பூசி சான்றிதழை காண்பிக்க வேண்டும் என்று கூறியிருந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் உணவகங்கள், மதுக்கூடங்கள், திரையரங்குகள், கேளிக்கை விடுதிகள் போன்ற இடங்களில் தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என்ற முறை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது இடங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு செல்லும் போது மட்டும் மக்கள் முகக் கவசங்கள் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்ட வெளிநாட்டு பயணிகள் சுவிசர்லாந்து நாட்டிற்கு வருவதற்கான பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



