மருந்துப் பொருட்களின் விலைகளுக்கு சூத்திரமொன்றை உருவாக்க அரசாங்கம் திட்டம்

Prathees
3 years ago
மருந்துப் பொருட்களின் விலைகளுக்கு சூத்திரமொன்றை உருவாக்க அரசாங்கம் திட்டம்

நாட்டில் மருந்துப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு ஏற்ற வகையில் விலை சூத்திரமொன்றை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசாங்க மருந்தாளுநர் சங்கம் தெரிவித்துள்ளது.

மருந்துகளின் விலைக்கு புதிய விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறி, அத்தகைய தீர்மானத்தை எடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக அதன் தலைவர் அஜித் திலகரத்ன தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மருந்துகளின் விலை உயர்ந்துள்ள நிலையில் இவ்வாறான விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்படுவதானது நோயாளிகளின் வாழ்வின் தலைவிதியை ஒட்டுமொத்த சந்தையே தீர்மானிக்கும் நிலையை உருவாக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அந்த சந்தை சக்திகளை அரசாங்கம் தொடர அனுமதித்தால், மருந்து நிறுவனங்கள் ஏற்கனவே விலையை உயர்த்தியுள்ள நிலையில், அது பெரும் சமூக-பொருளாதார நெருக்கடிக்கு வழி வகுக்கும் என்றும் அவர் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!