அமைச்சர் ஒருவரின் வீட்டின் மின்சாரக் கட்டண நிலுவை 1 கோடி 20 லட்சம்: அம்பலப்படுத்திய செயலாளர்

Mayoorikka
3 years ago
அமைச்சர் ஒருவரின் வீட்டின் மின்சாரக் கட்டண நிலுவை 1 கோடி 20 லட்சம்: அம்பலப்படுத்திய செயலாளர்

அமைச்சர் ஒருவரின் வீட்டின் மின்சாரக் கட்டணம் 1 கோடி 20 லட்சம்  ரூபாவை எட்டியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

கிருலப்பனை சரணங்கர வீதியிலுள்ள அமைச்சரின் வீட்டின் மின்சாரக் கட்டணத்தை செலுத்தாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வீட்டின் மின்சாரத்தை துண்டிக்க மின்சார சபை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், பாதுகாவலர்களே வீட்டின் மின்சாரம் விநியோகத்துக்கு இடையூறாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நாட்டின் ஏழை மக்களின் மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு முன்னர் இவ்வாறான அமைச்சர்களின் மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!