இந்தியாவிலிருந்து படகுமூலம் இலங்கைக்கு கடத்தவிருந்த 400 கிலோ கஞ்சா பறிமுதல்!
Mayoorikka
3 years ago

தமிழகத்திலிருந்து படகு மூலம் இலங்கைக்குக் கடத்தப்பட இருந்த 400 கிலோகிராம் கஞ்சாவை நாகபட்டிணம் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதுடன், ஐவரைக் கைதுசெய்துள்ளனர்.
நாகபட்டிணம் – கீச்சாங்குப்பத்தில் உள்ள, பழைய மீன்பிடித் துறைமுகப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த விசைப் படகு ஒன்றிலிருந்து, 200 பைகளில் பொதி செய்யப்பட்ட நிலையில், 400 கிலோகிராம் கஞ்சா பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ஆந்திர மாநிலத்திலிருந்து வாகனம் மூலம் நாகபட்டிணம் மாவட்டத்துக்கு கஞ்சாவைக் கடத்தி, அங்கிருந்து படகு மூலம் இலங்கைக்குக் கடத்த திட்டமிடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.



