காலாவதியாகும் கொவிட் தடுப்பூசிகள்: சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்ட தகவல்

Mayoorikka
3 years ago
காலாவதியாகும் கொவிட் தடுப்பூசிகள்: சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்ட தகவல்

எதிர்வரும் ஜூலை மாதத்துடன் நாட்டில் உள்ள கொவிட்-19 தடுப்பூசிகளின் தொகை காலாவதியாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

எனினும், தற்போது இலக்கு வைக்கப்பட்டுள்ள தரப்பினருக்கான தடுப்பூசி நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, 6.2 மில்லியன் பேருக்கு இதுவரையில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

பொது இடங்களுக்கு செல்பவர்கள், பூரண தடுப்பூசி ஏற்றத்திற்கு உள்ளாகி இருக்க வேண்டும் என்ற நடைமுறை ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியின் பின்னர் அமுலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!