வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்களுக்கு தேவையேற்படின் நான்காம் கட்ட தடுப்பூசியை வழங்க முடியும்.

Keerthi
3 years ago
வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்களுக்கு தேவையேற்படின் நான்காம் கட்ட தடுப்பூசியை வழங்க முடியும்.

வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்களுக்கு தேவையேற்படின் செயலூக்கி தடுப்பூசிக்கு மேலதிகமாக, நான்காம் கட்ட தடுப்பூசியை வழங்க முடியும்.

எவ்வாறிருப்பினும் நாட்டிலுள்ள அனைவருக்கும் நான்காம் கட்ட தடுப்பூசியை வழங்குவது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

சில நாடுகளில் நான்காம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள வைத்திய நிபுணத்துவ தரவுகளுக்கமையவும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைக்கு அமையவுமே இலங்கையில் நான்காம் கட்ட தடுப்பூசியை வழங்க முடியும்.

எனினும் இது தொடர்பில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!