ஐரோப்பாவில் தேடப்பட்டு வந்த நபர்களில் ஒருவரை சுவிட்சர்லாந்து பொலிஸார் கைது செய்துள்ளனர்

ஐரோப்பாவில் மிகவும் தேடப்பட்டு வந்த நபர்களில் ஒருவரை சுவிட்சர்லாந்து பொலிஸார் கைது செய்துள்ளனர். 35 வயதான பெல்ஜியத்தைச் சேர்ந்த குறித்த நபர் பல்வேறு பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
போதைப் பொருள் கடத்தல், ஆயுத கொள்ளை மற்றும் கடத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் குறித்த நபருக்கு தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சூரிச் பொலிஸாரினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபருடன் பயணித்த நெதர்லாந்தைச் சேர்ந்த 28 வயதான பெண்ணையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை பொலிஸார் கடந்த சில மாதங்களாகவே தேடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த நபருக்கு பெல்ஜிய நீதிமன்றம் கடந்த 2020ம் ஆண்டு நான்கு ஆண்டு சிறைத்தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த நபரை நாடு கடத்துமாறு பெல்ஜிய அதிகாரிகள் கோரிக்கை விடுப்பார்கள் என சுவிஸ் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



