உண்மையை கூறினால் “25 லட்சம் ரூபாய்: பொலிஸார் வெளியிட்ட தகவல்

Mayoorikka
3 years ago
உண்மையை கூறினால் “25 லட்சம் ரூபாய்: பொலிஸார் வெளியிட்ட தகவல்

ரம்புக்கனை, கொட்டவெஹர ரஜமஹா விகாரையில் தங்கப்பெட்டிகளை திருடிய சந்தேகநபர்கள் தொடர்பில் சரியான தகவல்களை வழங்கும் நபருக்கு பணப்பரிசு வழங்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

இதன்படி, சந்தேகநபர்கள் தொடர்பில் சரியான தகவல்களை வழங்குவோருக்கு 25 லட்சம் ரூபாய் (25,00,000/-) ரொக்கப் பரிசாக வழங்க தீர்மானித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அளிக்கப்படும் தகவல்கள் இரகசியமாக வைக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சந்தேகநபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால்
பொதுமக்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏஞ்சலோ பெர்னாண்டோ - 071 8591772
தலைமைப் பரிசோதகர் சிதத் ஜயசேகர - 0718591924
ராதாசி குற்றப் புலனாய்வுத் துறையின் செயல்பாட்டு அறை - 0112422176

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!