யாழ்ப்பாணத்தில் கடுமையாக பரவும் மற்றுமொரு நோய்: முழு நாட்டுக்குமே ஆபத்தா? விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Mayoorikka
3 years ago
யாழ்ப்பாணத்தில் கடுமையாக பரவும் மற்றுமொரு நோய்: முழு நாட்டுக்குமே ஆபத்தா? விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வட மாகாணத்தில்   மலேரியா நோய் பரவும் அனர்த்த நிலையுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

நான்கு  வார காலத்திற்குள் 4 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒரு நோயாளரை அடையாளம் காண்பதன் மூலம் அது ஆயிரம் நோயாளர்களின் ஆரம்பமாக அமையும் என்று சுகாதார அமைச்சின் மலேரியா நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

இந்த நான்கு நோயாளர்களும் யாழ்ப்பாண மாவட்டத்தில் பதிவாகியிருப்பதாக அவர் கூறினார்.

இந்த நோய் பரவும் அபாயம் இருப்பதாக குறிப்பிட்ட அவர், ஏனைய மாவட்டங்களில் இந்த நோய் பரவும் அனர்த்த நிலை இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

இலங்கை ஒரு சிறிய நாடு இவ்வாறான நாட்டில் ஒரு பிரதேசத்தில் நோய் அனர்தத் நிலை இருக்கின்றது என்பது அது நாட்டிற்கே அனர்த்த நிலையாகும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த அனர்த்த நிலையில் இருந்து யாழ்ப்பணத்தை மீட்டெடுப்பதற்காக மலேரியா ஒழிப்பு குழு, சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் அந்த மாகாணத்தின் வைத்தியசாலை பணிப்பாளர்கள் பாரிய அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர் என அவர் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!