ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி 'மொட்டு' கூட்டணி பங்காளிகள் விமலின் வீட்டில் அவசர சந்திப்பு

#SriLanka #Wimal Weerawansa #SLPP
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி  'மொட்டு' கூட்டணி பங்காளிகள் விமலின் வீட்டில் அவசர சந்திப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகளின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அவசர சந்திப்பு அமைச்சர் விமல் வீரவன்சவின்  இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

நேற்றுமுன்தினம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பாரதூரமான பிரச்சினைகளைத்  தீர்ப்பது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது.

இதனடிப்படையில், அந்தப் பிரச்சினைகள் தொடர்பில் யோசனைகளைத் தயாரித்து எதிர்வரும் 2ஆம் திகதி அரசிடம் கையளிக்க இந்த அணியினர் தீர்மானித்துள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

இது சம்பந்தமாக மற்றுமொரு சந்திப்பை அமைச்சர் விமல் வீரவன்ச அல்லது உதய கம்மன்பில ஆகியோரின் வீட்டில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!