அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள கல்வி கூட்டுறவு பொது சேவையாளர் சங்கம்

Reha
3 years ago
அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள கல்வி கூட்டுறவு பொது சேவையாளர் சங்கம்

தமக்கு வழங்கப்பட வேண்டிய 10,000 மற்றும் அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட்ட 5,000 கொடுப்பனவுகள் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்து கல்வி கூட்டுறவு பொது சேவையாளர் சங்கம் இன்று  அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளது.

அத்துடன், தமது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றைய தினம் கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அந்த சங்கத்தின் தலைவர் நந்தன ஹேவா தெரிவித்தார்.

கல்வி கூட்டுறவு பொது சேவையாளர் சங்கம் உள்ளிட்ட 4 தொழிற்சங்கங்கள் 10,000 ரூபா வேதன கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும் எனக் கோரி 40 நாட்கள் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்திருந்தன.

அதன்பின்னர் அதனுடன் தொடர்புடைய லசந்த அலகிவண்ண மற்றும் கூட்டுறவு ஆணைக்குழுவின் அதிகாரிகள் இணைந்து குறித்த அதிகரிப்பினை வழங்குவதாக உறுதியளித்திருந்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!