கடந்த இரண்டு நாட்களில் பதிவான மழைவீழ்ச்சி காரணமாக 20 கிகாவோட் மின் உற்பத்தி கிடைக்கப்பெற்றுள்ளது!

#Power #Rain
Reha
3 years ago
கடந்த இரண்டு நாட்களில் பதிவான மழைவீழ்ச்சி காரணமாக 20 கிகாவோட் மின் உற்பத்தி கிடைக்கப்பெற்றுள்ளது!

கடந்த இரண்டு நாட்களில் பதிவான மழைவீழ்ச்சி காரணமாக 20 கிகாவோட் மின் உற்பத்தியினை மேற்கொள்வதற்கு தேவையான நீர், கிடைக்கப்பெற்றுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அது மின் துண்டிப்பை மேற்கொள்ளாதிருப்பதற்கு போதுமானது அல்லவென அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

20 கிகாவோட் மின் உற்பத்தியை மேற்கொள்வதற்கு தேவையான நீர் கிடைக்கப்பெற்றுள்ளதால், மின்சாரத்திற்கு ஏற்பட்டிருந்த தட்டுப்பாடு 47 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதனை முகாமைத்துவம் செய்வதற்கு இலங்கை மின்சார சபையுடன் இன்றும், நாளையும் பேச்சுவார்தையை முன்னெடுக்கவுள்ளோம்.

மேலும் 200 மெகாவோட் மின்சாரம் எதிர்வரும் நாட்களில் மழைவீழ்ச்சியின் ஊடாக கிடைக்கப்பெறுமானால், சில நாட்களுக்கு மின் துண்டிப்பின்றி மின்சார விநியோகத்தை மேற்கொள்ள முடியும் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!