இலங்கை மின்சார சபைக்கு இந்தியாவிடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை
Mayoorikka
3 years ago

இலங்கை மின்சார சபைக்கு நேரடியாக எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக இந்திய அரசாங்கம் மற்றும் IOC உடன் இலங்கை மின்சார சபை இரு சுற்று பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளதாக மின்சார சபையின் பேச்சாளரும் பிரதிப் பொது முகாமையாளருமான ஏ.ஆர்.நவமணி குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இந்த பேச்சுவார்தை நிறைவடைந்தாலும் இந்தியாவின் முடிவிற்காக காத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கம் இலங்கை மின்சார சபைக்கு எரிபொருளை வழங்க சம்மதம் வெளியிட்டால், இலங்கை மின்சார சபை அல்லது IOC மூலம் அதைச் செய்ய முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இந்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.



