அதிவேகமாக பறந்த மோட்டார் சைக்கிள்: ஒருவர் பலி!மற்றொருவர் படுகாயம்

Prathees
3 years ago
அதிவேகமாக பறந்த மோட்டார் சைக்கிள்: ஒருவர் பலி!மற்றொருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டியார் மடம் சந்தியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கவிழ்ந்ததில் 22 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செட்டியார் மடம் சந்தியில் மோட்டார் சைக்கிள்  வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்றதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

காயமடைந்த 22 மற்றும் 20 வயதுடையவர்கள்,  வட்டுக்கோட்டை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 22 வயதான கந்தசாமி நிரோஜன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!