பண்டிகை காலங்களில் விசேட நிவாரணங்கள்: புத்தாண்டில் 125 ரூபாய்க்கு சம்பா அரிசி
Prathees
3 years ago

எதிர்வரும் புத்தாண்டு காலத்தில் இருந்து ஒரு கிலோ சம்பா அரிசியை நுகர்வோருக்கு 125 ரூபாய்க்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
காலியில் இன்று (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், பண்டிகை காலங்களில் மக்களுக்கு விசேட நிவாரணங்கள் பலவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பந்துல குறிப்பிட்டுள்ளார்.



