தமிழ்ப் பெண்ணை மணமுடிக்கும் மேக்ஸ்வெல் :தமிழில் திருமண அழைப்பிதழ்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல், தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட ஆஸ்திரேலிய வாழ் இந்தியப் பெண்ணை திருமணம் செய்யவுள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல், தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட வினி ராமன் என்பவரைக் காதலிப்பதாகவும், அவரைத் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்ப் பெண்ணை மணமுடிக்கும் மேக்ஸ்வெல் கடந்த மூன்று ஆண்டுகளாக அவர்கள் காதலித்துவந்துள்ளனர். இவர்கள் ஜோடியாகப் பல இடங்களுக்குச் சென்ற புகைப்படங்களைத் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
தமிழ்ப் பெண்ணை மணமுடிக்கும் மேக்ஸ்வெல் இப்போது மேக்ஸ்வெல்லுக்கும், வினி ராமனுக்கும் இந்திய பாரம்பரிய முறைப்படி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
தமிழில் அழைப்பிதழ் இந்திய பாரம்பரிய உடையில் இருக்கும் இருவரின் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. மேலும், அவர்களது திருமண அழைப்பிதழ் வைஷ்ணவ மரபுப்படி தமிழில் அச்சிடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.




