வரலாற்றில் முதல் தடவையாக இலங்கையில் தயாரிக்கப்பட்ட மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் சைக்கிள்!
#SriLanka
Nila
3 years ago

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக, மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் சைக்கிளொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த மோட்டார் சைக்கிளை 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சந்தைக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் சசிரங்க டி சில்வாவினால், இந்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மின்சார மோட்டார் சுமார் 4 மணிநேரம் மின்சாரத்தில் சார்ஜ் செய்யக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், 120 கிலோமீற்றர் வரை பயணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.



