12 வயதிற்கு குறைந்த சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்த பரிந்துரை - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன
Reha
3 years ago

12 வயதிற்கு குறைந்த சிறுவர்களுக்கு, கொவிட் தடுப்பூசியை செலுத்துவதற்கான பரிந்துரையினை வழங்கவுள்ளதாக சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர்கள் சங்கம் அறியப்படுத்தியுள்ளது.
இந்தப் பரிந்துரை அடுத்த வாரம் கிடைக்கப்பெறும் என எதிர்ப்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் நேற்றைய தினத்தில் 1,259 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது. இதற்கமைய, கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 625, 804 ஆக உயர்வடைந்துள்ளது.
அதேநேரம், கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 373 பேர் நேற்று குணமடைந்தனர். இதற்கமைய, கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 594, 348ஆக அதிகரித்துள்ளதென தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.



