ஒன்லைனில் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு ஐபோன் ஓடர் செய்த நபருக்கு கிடைத்த அதிர்ச்சி
Prasu
3 years ago

இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணுக்குதான் இந்த குளறுபடி நடந்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த கௌலா லாஃப்கெய்லி எனும் பெண் சுமார் 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆப்பிள் ஐபோனை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவர் எதிர்பார்த்திருந்த டெலிவரி நாளுக்கு 2 நாட்கள் தாமதமாக அந்த பார்சல் வந்துள்ளது. அதை பிரித்து பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அதனுள்ளே ஐபோனுக்கு பதிலாக ஹேண்ட் வாஷ் இருந்துள்ளது.

இதையடுத்து அவர் சம்மந்தபட்ட இணையதளத்தில் புகார் செய்ய அவர்கள் நடத்திய விசாரணையில் டெலிவரி செய்யும் நபர் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.



