காங்கேசன்துறையில் 5 இந்தியப் படகுகளும் 4 இலட்சத்து 31 ஆயிரத்து 500 ரூபாவுக்கு ஏலம்

Prasu
3 years ago
காங்கேசன்துறையில் 5 இந்தியப் படகுகளும் 4 இலட்சத்து 31 ஆயிரத்து 500 ரூபாவுக்கு ஏலம்

யாழ்., காங்கேசன்துறையில் இருந்த 5 இந்தியப் படகுகளும் இன்று 4 இலட்சத்து 31 ஆயிரத்து 500 ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்த வேளை கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களின் ட்ரோலர் படகுகள் நேற்று முதல் ஏலத்தில் விடப்படுகின்றன. இதற்கமைய இன்று காங்கேசன்துறை துறைமுகப் பகுதியில் தரித்து வைக்கப்பட்டிருந்த 5 படகுகள் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகளால் ஏலத்தில் விடப்பட்டன. இதன்போதே இந்த 5 படகுகளும் 4 இலட்சத்து  31 ஆயிரத்து 500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டன.

இதேவேளை, நாளை கிளிநொச்சி மாவட்டம், கிராஞ்சியில் தரித்து வைக்கப்பட்டுள்ள இந்தியப் படகுகள் ஏலத்தில் விடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!