அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பு: போதைப்பொருள் கடத்திய தம்பதிகள் கைது
Prathees
3 years ago

களுபோவில - கொஹுவல பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட 40 வயதுடைய சந்தேகநபரிடமிருந்து ஒரு கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, கைது செய்யப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் இணைந்தே போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பெண்ணின் கணவர் பஸ் நடத்துனராக வேலை செய்து வருவதாகவும், இதனால் போதைப்பொருளை பஸ்ஸில் அவர் கடத்தி வந்திருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.



