மஹிந்தானந்தவிற்கு எதிரான வழக்கு: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு
Mayoorikka
3 years ago

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் லங்கா சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிரான இலஞ்ச ஊழல் வழக்கை தொடர்ந்தும் முன்னோக்கி கொண்டு செல்வதா, இல்லையா என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 25 ஆம் திகதி தீர்மானத்தை அறிவிக்குமாறு அமல் ராஜகருணா, பிரதீப் ஹெட்டியாராச்சி மற்றும் மஹேன் வீரமன் ஆகிய மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் உத்தரவிடப்பட்டுள்ளது.



