இலங்கைக்கு போதைப்பொருள் தடுப்பு உபகரணங்களை நன்கொடையாக வழங்கியது ஜப்பான்
Mayoorikka
3 years ago

ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு எதிராக பயன்படுத்தக்கூடிய வாகனங்கள் மற்றும் உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
இந்த நன்கொடையை ஜப்பானிய தூதுவர் Mizukoshi Hideaki அவர்களினால் இன்று ஜனாதிபதி செயலக வளாகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.



