எதற்கும் துணிந்தவன் கதை வேறொரு நடிகருக்காக எழுதப்பட்டது - இயக்குனர் பாண்டிராஜ் பேட்டி

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பிப்ரவரி 4 ஆம் தேதியே வெளியாகி இருக்கவேண்டிய இப்படம் கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டு தற்போது மார்ச் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுளள்து.
இப்படத்தின் பாடல்கள் சில ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ET படத்தின் ட்ரைலருக்காக ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது இயக்குனர் பாண்டிராஜ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இப்படம் குறித்த பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் “சூர்யாவிற்காக பிரமாண்டமான கதை ஒன்றை எழுதியிருந்தேன், அப்படத்திற்காக பல மடங்கு உழைக்கவேண்டி இருந்தது. அந்த கதை தயாரிப்பாளர் கலாநிதி மாறன் உட்பட அனைவரும் பிடித்திருந்தது.
ஆனால் கலாநிதி மாறன் சார் சூர்யாவை கிராமத்திற்கு கூட்டி செல்வோம் என எதற்கும் துணிந்தவன் கதையை சூர்யாவிற்காக தேர்வு செய்தார். பின் சூர்யாவிடம் ET கதையை கூற இப்படத்தில் பணியாற்றினோம்.
மேலும் எதற்கும் துணிந்தவன் கதை வேறொரு நடிகருக்காக வைத்திருந்தது” எனவும் குறிப்பிட்டு இருந்தார் பாண்டிராஜ்.



