ஒன்றிணைந்து முன்னேறுவோம்- ஜனாதிபதியின் சுதந்திர தின செய்தி!
#Sri Lanka President
Nila
3 years ago

பல சவால்களுக்கு மத்தியிலும் நமது சுதந்திரத்தை நனவாக்க அனைத்து தேசபக்தர்கள் செய்த தியாகங்களை நான் மரியாதையுடனும் நன்றியுடனும் நினைவு கூர்கிறேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கை சுதந்திர தினத்தையொட்டி விடுத்துள்ள செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இன்று நாம் 74ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். இந்நாளில் எமது சுதந்திரத்தை நனவாக்க அனைத்து தேசபக்தர்களும் செய்த தியாகங்களை நான் மரியாதையுடனும் நன்றியுடனும் நினைவு கூர்கிறேன்.
அந்த தியாகங்கள் வீண் போகாமல் இருக்க நாம் ஒன்றிணைந்து ஒரு வளமான தேசமாக மாற நேர்மறையாக செயற்பட்டு முன்னேறுவோம். – என அவர் தெரிவித்துள்ளார்.



