முதன்முறையாக விஜய்யுடன் நடிக்கும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் !
Prabha Praneetha
3 years ago

நடிகை ஸ்ரீதேவிக்கும் பாலிவுட் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான போனி கபூருக்கும் பிறந்த மூத்த மகள் ஜான்வி கபூர்.
பாலிவுட் திரையுலகில் இளம் நடிகையாக வலம் வரும் ஜான்வி கபூர், எப்போது தென்னிந்திய சினிமாவிற்கு அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இப்படத்திலும் ஜான்வி கபூர் நடித்ததாக கூறப்படுகிறது, ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
இந்நிலையில் தற்போது நடிகை ஜான்வி கபூர் நடிகர் விஜய் தேவரகொண்டா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிகவும் பிரபலமான இளம் நடிகர்களாக இருந்து வரும் இவர்கள் ஜோடியாக நடிப்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



