தெங்குப்பொருட்களின் அமோக உற்பத்தி காரணமாக, சதோசவில் இவ்வருடம் முழுவதும் தேங்காய் 75ரூபாவாகும்.
#SriLanka
#Sathosa
#Bandula Gunawardana
Mugunthan Mugunthan
3 years ago

இந்த வருடம் முழுவதும் 75 ரூபா என்ற நிலையான விலைக்கு சதோச வலைப்பின்னல் மூலம் நுகர்வோர் தேங்காயை பெற்றுக்கொள்ள முடியும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
31 நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் தேங்காயின் விலை அதிகரித்து வருவதை அடுத்து நுகர்வோர் நியாயமான விலையில் அதனை பெற்றக்கொள்ளும் நோக்கில் பெருந்தோட்டத்துறை அமைச்சு மற்றும் தெங்கு ஆய்வு நிறுவகத்தினால் வர்த்தக அமைச்சு மற்றும் லங்கா சதொச விற்பனை வலைப்பின்னலுடன் இது தொடர்பாக உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டுள்ளது.



