வார இறுதி விடுமுறை தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
#SriLanka
Nila
3 years ago

வரவிருக்கும் வார இறுதி நீண்ட விடுமுறையில் பொதுமக்கள் கவனமாக செயற்படுமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.
இந்த காலகட்டத்தில் COVID-19 சுகாதார வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
வார இறுதி நீண்ட நாட்கள் விடுமுறையை முன்னிட்டு பலர் மீண்டும் பயணத்தைத் ஆரம்பித்துள்ளனர். அவ்வாறு பயணங்களை மேற்கொள்வோர் நெரிசல் குறைவான இடங்களுக்குச் செல்லவும் எச்சரிக்கையாக இருக்கவும் கேட்டுக் கொண்டார்.
நாட்டில் சுமார், 15 மில்லியன் மக்கள் கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை பெற்றிருந்தாலும், பலர் இன்னும் மூன்றாவது டோஸைப் பெறவில்லை என்றும் டாக்டர் சுட்டிக்காட்டினார்.



