தடைசெய்யப்பட்ட 1.2 கோடி ரூபாய் பெறுமதியான இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!
Mayoorikka
3 years ago

இலங்கை வீதிகளில் பயன்படுத்த தடை செய்யப்பட்ட அதிக திறன் வாய்ந்த 1.2 கோடி ரூபாய் பெறுமதியான இரண்டு மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
காலி - கொழும்பு பிரதான வீதியின் ஊடாக பயணித்துக் கொண்டிருந்த 100 மோட்டார் சைக்கிள்கள் கொண்ட பேரணியில் இந்த மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் பயணித்த இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அழுத்கம நகர போக்குவரத்து பொலிஸ் குழுவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் களுத்துறை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.



