3 ஆவது முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை நடு வானிலேயே குறிவைத்து அழித்த ஐக்கிய அரபு அமீரகம்

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 3 ஆவது முறையாக ஏவிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை விமானப்படையினர்கள் நடு வானிலேயே குறிவைத்து அழித்ததாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.
ஏமன் நாட்டின் ராணுவ படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்குமிடையே பல ஆண்டுகளாக உள்நாட்டு யுத்தம் நடந்து வருகிறது. இதனையடுத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமன் நாட்டிற்கு உதவி புரியும் ஐக்கிய அரபு அமீரகம் மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது.
அதன்படி 3 ஆவது முறையாக ஐக்கிய அரபு அமீரகம் நோக்கி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணையை அனுப்பியுள்ளார்கள். இதனை கண்டறிந்த ஐக்கிய அரபு விமானப்படையினர்கள் ஏவுகணையை நடு வானிலேயே அழித்துள்ளார்கள்.
அவ்வாறு அழிக்கப்பட்ட ஏவுகணையின் பாகங்கள் ஆல் நடமாட்டமில்லாத இடத்தில் விழுந்ததாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் விதமாக ஐக்கிய அரபு அமீரகம் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணையை ஏவிய இடத்தை குறிவைத்து அழித்துள்ளது.



