IMFஐ நாடும் அரசாங்கத்தின் முயற்சியை ஆதரிக்க வேண்டும்: ரணில்
#Ranil wickremesinghe
Prathees
3 years ago

சர்வதேச நாணய நிதியத்தை நாடும் அரசாங்கத்தின் முயற்சியை முறியடிக்கக் கூடாது என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக வடிவமைப்பாளர்கள் குழுவுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் எனவும் முன்னாள் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
புத்தளம் பெத்தானி பங்களாவில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது,பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நிலைமைகள் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளன.



