10,000க்கும் மேற்பட்ட இளம் பிள்ளைகளுக்கு முதல் தடுப்பூசி வழங்க சிங்கபூர் முடிவு.

ஐந்திலிருந்து ஆறு வயதுக்கு உட்பட்ட கிட்டத்தட்ட 10,000 சிறுவர்களுக்கு முதல் கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசித் திட்டம் சிறுவர்களுக்கு நீட்டிக்கப்பட்டதும் இந்த வயதுப் பிரிவில் உள்ள பிள்ளைகளில் 16,000க்கும் அதிகமானோர், அதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு தடுப்பூசித் திட்டம் ஐந்திலிருந்து 11 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
‘அவர் தெம்பனிஸ் ஹப்’ மையத்தில் சிறுவர்களுக்கான தடுப்பூசி நிலையத்திற்குச் சென்றிருந்த சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சரும் சுகாதார இரண்டாம் அமைச்சருமான இந்த விவரங்களைத் தெரிவித்தார். சமுதாய, குடும்ப மேம்பாடு, கல்வி ஆகியவற்றுக்கான துணை அமைச்சர் சுன் சூலிங்கும் இந்தத் தடுப்பூசி நிலையத்திற்குச் சென்றார்.
ஐந்திலிருந்து 11 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் தங்களின் பெற்றோர் அல்லது தங்களைக் கவனித்துக்கொள்ளும் பெரியவர்களுடன் முன்பதிவு செய்துகொள்ளாமல் முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். இந்த ஏற்பாடு வாரந்தோறும் திங்கள் முதல் வியாழன் வரை பொருந்தும்.
“மருத்துவ ரீதியாக தங்கள் பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதி இருந்தால் அதற்குப் பதிவுசெய்யுமாறு நாங்கள் பெற்றோரைப் பெரிதும் ஊக்குவிக்கிறோம். சிறுவர்களுக்குத் தடுப்பூசி போடுவதன் மூலம் கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டால் மோசமாக நோய்வாய்ப்படுவதிலிருந்து சமூகத்தில் பலரைப் பாதுகாக்கலாம், மேலும், சமூக அளவில் கிருமி பரவும் அபாயத்தைக் குறைக்கலாம்,” என்று திரு மசகோஸ் கூறினார்.



