வெள்ளை மாளிகையில் புதுவரவாக உலா வரும் 'வில்லோ' பூனை
Keerthi
3 years ago

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், அவரது மனைவி ஜில் பைடனும் செல்லப்பிராணிகள் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள் ஆவர். அந்த வகையில் வில்லோ என்கிற பூனை அவர்களின் வீட்டுக்கு புதுவரவாக வந்துள்ளது. ஜோ பைடன் - ஜில் பைடன் தம்பதியினர், 'வில்லோ' என, பெயரிட்டுள்ளனர். அந்த பூனை வெள்ளை மாளிகையில் உலா வரும் புகைப்படங்களை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் இரண்டு வயதான புதிய ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாயை ஜோ பைடன் சமீபத்தில் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.



