சதொச அரிசியை மட்டுப்படுத்துகிறது, ரேஷனுக்கு விற்கிறது
#SriLanka
#rice
#prices
Mugunthan Mugunthan
3 years ago

உள்நாட்டில் அரிசி விலை அதிகரித்துள்ள நிலையில், இறக்குமதி செய்யப்படும் நாட்டு அரிசியின் விலையை குறைத்து நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்கு நாடளாவிய ரீதியில் சதொச கிளைகள் நடவடிக்கை எடுத்துள்ளன.
ஹட்டன் சதொச கிளையானது இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ நாட்டு அரிசியை கிலோ ஒன்று 105 ரூபாவிற்கும், இறக்குமதி செய்யப்பட்ட சம்பா அரிசி கிலோ ஒன்று 128 ரூபாவிற்கும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது ஹட்டன் சதொச கிளைக்கு இறக்குமதி செய்யப்பட்ட நீராவி நாட்டு அரிசி மாத்திரமே கிடைத்துள்ளதுடன், 10 கிலோ அரிசியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளது.



