அமெரிக்காவில் கார் விபத்தில் சிக்கிய ஓனரின் உயிரை காப்பாற்றிய 'நாய்'..

Keerthi
3 years ago
அமெரிக்காவில் கார் விபத்தில் சிக்கிய ஓனரின் உயிரை காப்பாற்றிய 'நாய்'..

அமெரிக்காவில் கார் விபத்தில் சிக்கிய ஓனரின் உயிரை காப்பாற்றுவதற்காக ஒரு நாய் செய்த செயலானது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 3-ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள லெபனான் நகரில் இரண்டு பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த நிலையில் விபத்தில் சிக்கிய தனது ஓனரின் உயிரை காப்பாற்றுவதற்காக ஒரு நாய் செய்த செயலானது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜெர்மன் ஷெப்பர்டு வகையை சேர்ந்த ஒரு நாய் கார் விபத்தில் சிக்கிய தனது உரிமையாளரின் உயிரை காப்பாற்றுவதற்காக காவல்துறையினரின் வண்டியை வழிமறித்துள்ளது.

பின்னர் ஒரு இடத்திற்கு அழைத்து செல்ல முயற்சி செய்துள்ளது. அதனை புரிந்து கொண்ட காவல்துறையினர் அந்த நாயை பின்தொடர்ந்து சென்றனர். அப்போது அந்த நாய் கார் விபத்து நடந்த இடத்திற்கு அவர்களை சரியாக அழைத்து சென்றுள்ளது. அதன்பிறகு விபத்தில் சிக்கிய இருவரையும் மீட்ட காவல்துறையினர் சிகிச்சைக்காக அவர்களை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் ஓனரின் உயிரை காப்பாற்ற அந்த நாய் செயலானது காவல்துறையினரை பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!