சடுதியாக அதிரிகத்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை! காரணம் என்ன?
Mayoorikka
3 years ago
இந்த வருடத்தில் கடந்த 4 நாட்களில் மாத்திரம் 11,380 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர்.
இவர்களில் அதிகமானோர் ரஷ்யாவில் இருந்து இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்தியா, யுக்ரேன், ஜெர்மனி, மாலைத்தீவு, இங்கிலாந்து, கஸகஸ்தான், அவுஸ்திரேலியா மற்றும் போலாந்து போன்ற நாடுகளில் இருந்தும் பல சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பினால் கடந்த ஆண்டுகளில் உலகளாவிய ரீதியில் முடக்க நிலை ஏற்பட்டிருந்த நிலையில் இந்த வருடம் இலங்கையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்