ஃபஷன் ஷோக்கள் நடத்துவதற்கு எதிராக நூதன போராட்டம்!
Mayoorikka
3 years ago

அர்ஜெண்டினாவில் ஃபஷன் ஷோக்கள் நடத்தப்படுவதற்கு எதிராக, பிளாஸ்டிக் கழிவுகளால் ஆன ஆடைகளை அணிந்தபடி நூதன முறையில் போராட்டம் நடைபெற்றது.
தலைநகர் பியூனஸ் அயர்ஸில் உள்ள பிரபல ஆடைத் தயாரிப்பு நிறுவனத்தின் முன்பு, பலர் ஃபஷன் ஷோ பாணியிலேயே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஃபஷன் ஷோக்களுக்காக தயாரிக்கப்படும் ஆடைகள் அதிகம் பயன்படுத்தப்படுவது இல்லை என்றும், ஆனால் அதற்காக அதிகளவு தண்ணீர் வீணடிக்கப்படுவதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினார்.
அந்தவகையில், சுற்றுச்சூழல் மற்றும் பூமி வெப்பமயமாதல் பிரச்னைகளுக்கு ஃபேஷன் ஷோக்களும் முக்கிய காரணம், என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.



