மெனிங் பொது சந்தையில் மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி!

Prabha Praneetha
3 years ago
மெனிங் பொது சந்தையில் மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி!

கொழும்பு மெனிங் பொது சந்தையில் மரக்கறிகளில் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தைக்கு வரும் மரக்கறிகளின் அளவு சற்று அதிகரித்துள்ளதாகவும், எனினும், மரக்கறிகளை கொள்வனவு செய்ய மக்களிடம் போதிய பணம் இல்லையெனவும் மெனிங் சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே, மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த நாட்களில் 650 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கறி மிளகாய் இன்றைய தினம் 500 ரூபாவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், லீக்ஸ், போஞ்சி, கோவா உள்ளிட்ட மரக்கறிகளின் விலையும் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!