ஒமிக்ரோன் கடுமையான பாதிப்பை உண்டு பண்ணாது: உலக சுகாதார ஸ்தாபனம்
#world_news
#Covid Variant
#Omicron
Mugunthan Mugunthan
3 years ago

தென்னாபிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் திரிபான ஒமிக்ரோன் உலக நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது.
இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு கடுமையான நோயை ஏற்படுத்தாது என்று கூறியுள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் அவசர கால இயக்குனர் மைக்கேல் ரியான் கூறும்போது, "முந்தைய கொரோனா வகைகளை விட ஓமைக்ரான் கடுமையான நோயை ஏற்படுத்துகிறது என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
நம்மிடம் மிகவும் பயனுள்ள தடுப்பூசிகள் உள்ளன, அவை தற்போதுள்ள அனைத்து வகைகளுக்கும் எதிராக செயல்பட்டு நோயின் தீவிரத்தை கட்டுபடுத்தியுள்ளது. ஒமைக்ரான் குறித்து மேலும் ஆராய்ச்சி தேவை" என்று அவர் தெரிவித்துள்ளார்.



