கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள போலிக் கையுடன் வந்த நபர்

Nila
3 years ago
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள போலிக் கையுடன் வந்த நபர்

கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றை பெற்றுக்கொள்வதற்காக பொய்யான கையை பொருத்திச் சென்ற சம்பவம் ஒன்று இத்தாலியில் பதிவாகியுள்ளது.

தனது உண்மையான கை மீது சிலிக்கன் மேற்பரப்பு பொருத்திக்கொண்டு 50 வயதுடைய நபர் ஒருவர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் பகுதிக்கு சென்றுள்ளார்.

இதனை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்ற தவறான எண்ணத்தில் குறித்த நபர் சென்றிருந்தாலும் தாதியர்கள்; ஒன்றும் அவ்வளவு அறிவற்றவர்கள் அல்ல என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஏமாற்றியதற்காக குறித்த நபர் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசியை செலுத்துவதற்காக சட்டையை சரிசெய்தபோது இறப்பர் போன்றும் குளிர்மையான தன்மையையும் தோல் நிறம் பிரகாசமாகவும் இருந்ததை அவதானித்ததாக ஊசியை செலுத்த தயாரான தாதி தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் குறித்து கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்தே இந்த சம்பவமும இடம்பெற்றுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!