73 ஆண்டுகள் கழித்து நூலகத்தை வந்தடைந்த புத்தகம் லங்கா4.கொம் / Lanka4.com
Keerthi
4 years ago
நூலகத்திலிருந்து இரவல் வாங்கப்பட்ட புத்தகமொன்று 73 ஆண்டுகள் கழித்து மீண்டும் அந்த நூலகத்திடமே வந்தடைந்த விநோத சம்பவமொன்று பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
கடந்த 1948ஆம் ஆண்டு இரவல் கொடுக்கப்பட்ட Stately Timber எனப்படும் குறித்த புத்தகம் அண்மையில் அஞ்சல் வழியாக கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்நூலகத்தின் ஊழியர்கள் ஆச்சரியத்துடன் தெரிவித்துள்ளனர்.
மேலும் அப்புத்தகத்தை இரவல் வாங்கியவரின் மகளே அனுப்பியதாகவும், மறைந்த தனது தந்தை, புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்க மறந்துவிட்டாரா அல்லது அதை வைத்துக்கொள்ள ஆசைப்பட்டாரா என்பது தெரியவில்லை என்றும் புத்தகத்துடன் வந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளர்.