ஏலத்தில் `மோனா லிசா` ஓவியம்
Keerthi
4 years ago
பிரான்ஸ் தலைநகர் பரீஸில், 400 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த மோனா லிசா ஓவியத்தின் பிரதியொன்று ஏலம் விடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1503ஆம் ஆண்டு லியொனார்டோ டா வின்சியால் வரையப்பட்ட உலகப்புகழ் பெற்ற மோனலிசா ஓவியம் பரீஸில் உள்ள லூவார் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் மோன லிசா ஓவியம் வரையப்பட்ட சில ஆண்டுகளிலேயே மேலும் சில ஓவியர்கள் அதை போலவே அச்சசலான பிரதிகளைத் தீட்டினர்.
அவ்வாறு தீட்டப்பட்ட பிரதி ஓவியம் ஒன்று கடந்த ஜூன் மாதம் இலங்கை மதிப்பில் சுமார் 68 கோடி ரூபாய்க்கு ஏலம் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது பரீஸில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மற்றொரு பிரதி ஓவியம் ஏலம் விடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.