வாலுடன் பிறந்த குழந்தை

Keerthi
4 years ago
வாலுடன் பிறந்த குழந்தை

குழந்தையொன்று 12 சென்ரி மீற்றர் நீளமான வாலுடன் பிறந்த  சம்பவம் பிரேஸிலில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலின், ப்போர்டாலிஸா (Fortaleza) நகரில் உள்ள வைத்தியசாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இக்குழந்தையின் பின்பகுதியில் 12 சென்டி மீற்றர்  வால் ஒன்று இருந்துள்ளதோடு அதன்  முடிவில் பந்து போன்ற அமைப்பு காணப்பட்டதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இக்குழந்தையின் வால் நரம்பு மண்டலத்துடன் இணையாமல் இருந்ததால் எந்தவித சிக்கலும் இன்றி  பெற்றோர்களின் சம்மதத்தோடு அறுவை சிகிச்சை மூலம் வாலை வைத்தியர்கள் அகற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து வெளியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!