இசை நிகழ்ச்சி - கூட்ட நெரிசலில் 8 பேர் பலி

Prasu
4 years ago
 இசை நிகழ்ச்சி - கூட்ட நெரிசலில்   8 பேர் பலி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹவுஸ்டன் நகரில் உள்ள என்ஆர்ஜி பூங்காவில் இன்று (அந்நாட்டு நேரப்படி இரவு 9 மணியளவில்) பிரபல பாடகர் ட்ரயஸ் ஸ்கார்ட் என்பவரின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த இசை நிகழ்ச்சியை காண 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்த பூங்காவில் குவிந்தனர். இசை நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இசை நிகழ்ச்சியை காண வந்திருந்த ஆயிரக்கணக்கானோர் திடீரென நிகழ்ச்சி நடைபெறும் மேடை நோக்கி முன்னேறி சென்றனர். இதனால், அங்கு திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. 

இந்த கூட்ட நெரிசலில் பலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால், அவர்கள் கூட்ட நெரிசலில் மயங்கி கிழே விழுந்தனர். நெரிசல் அதிகமாக இருந்ததால் கிழே விழுந்தவர்கள் மீது பலரும் ஏறி மிதித்து சென்றனர். இதனால், அப்பகுதியே பெரும் கூச்சல் குழப்பமாக காணப்பட்டது.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இசை நிகழ்ச்சியை நிறுத்தி, பூங்காவில் இருந்து மக்களை வெளியேற்றினார். மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கம் மற்றும் காயமடைந்த நூற்றுக்கணக்கானோர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!