பலரது கவனத்தையும் ஈர்த்த ’My Love ’
Keerthi
3 years ago

கலிபோர்னியாவில் உள்ள ஊர்வன மிருகக்காட்சிசாலையின் நிறுவனரான ஜெய் ப்ரூவர், என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கதில் பதிவேற்றும் வீடியோக்களால் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றார்.
குறிப்பாக இவர் அண்மையில் பகிர்ந்த வானவில் நிற பாம்பின் வீடியோவானது இணையவாசிகள் இடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, அதனை தற்போது வரை சுமார் 20 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாம்புகளிலேயே மிகவும் அழகான பாம்பாக கருதப்படும் இப்பாம்பிற்கு ”மை லவ் ”( MyLove ) எனப் பெயரிடப்பட்டுள்ளதாக மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பெரும்பாலும் நீர்வாழ் தாவரங்களில் மறைந்து வாழும் இந்த வானவில் பாம்புகள், தீங்கு விளைவிக்காதவை என்றும் எப்போதாவது அரிதாக நிலப்பரப்பிற்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



