சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

2016 ஆம் ஆண்டு ராஜகிரியவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வாகன விபத்து தொடர்பில் முன்னாள் பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
முக்கிய சாட்சியான சந்தீப் சம்பத் உள்ளிட்ட 6 சாட்சிகள் அடுத்த விசாரணை jpfதியில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க, அவரது சாரதி துசித் திலும் குமார மற்றும் வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி (OIC) சுதத் அஸ்மடல ஆகியோர் பொய்யான சாட்சியங்களை ஜோடித்தமை, பொய்யான சாட்சியங்களை தயாரித்தல் மற்றும் பொய்யான அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பித்தமை ஆகிய 16 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.



