மின்னல் தாக்கியதில் பாறைத் துண்டு தலையில் விழுந்து இளைஞன் பலி
#Death
#weather
Prathees
3 years ago

கல்குவாரி ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
நாவலப்பிட்டி- போஹில் தோட்டத்தைச் சேர்ந்த 19 வயதான ரொபின்சன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்ததாக நாவலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
நிலவும் சீரற்ற வானிலையால் நாவலப்பிட்டி- கிறீன்வூட் பகுதியில் உள்ள கல்குவாரியின் பாறையொன்றில் மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது குறித்த பாறை துண்டுதுண்டாக உடைந்துள்ளதுடன், அதில் ஒரு துண்டு குறித்த இளைஞனின் தலையில் விழுந்ததால் சம்பவ இடத்திலேயே இளைஞன் உயிரிழந்துள்ளான்.
மேலும் மற்றுமொரு கற்துண்டு பெக்கோ இயந்திரத்தின் சாரதி மீதும் விழுந்துள்ளதால் அவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,பெக்கோ இயந்திரமும் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்..



