அமைச்சுப் பதவியை இழப்பாரா கம்மன்பில? - அரச தலைமைக்குத் தொடர்ந்து அழுத்தம்
Prabha Praneetha
3 years ago

உதய கம்மன்பிலவின் அமைச்சுப் பதவியை உடனடியாக பறிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மூத்த உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் அரசின் முடிவையும், 'மொட்டு' கட்சியின் தலைவர்களையும் கம்மன்பில கடுமையாக விமர்சித்து வருவதை அடிப்படையாகக்கொண்டே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்கொட்லாந்து சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளைமறுதினம் நாடு திரும்பவுள்ளார். அதன்பின்னரே இந்த விவகாரம் தொடர்பில் இறுதி முடிவெடுக்கப்படும் எனத் தெரியவருகின்றது.



